வியாழன் கவிதை

முள்ளிவாய்க்காலில் நடந்தது

கெங்கா ஸ்ரான்லி

முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன
முடக்கிய செய்திகள் சொல்வது என்ன
மக்களின் நிலைமை அறிந்தவர் எவரோ
உதவிகள் செய்ய முனைந்தவர் யாரோ
அவலக்குரல்கள அழுதிடும் சத்தம்
அண்டமே பிளக்கும்
கவலைகள் சூழ்ந்த களம்அங்குதானே
கண்டவர் யாரோ கூறிடுவாரோ
பெரியவர் குழந்தை பெண்கள் ஆண்கள்
போற்றிய மண்ணில் குவிந்தன உடல்கள்்
பீரங்கி வெடிக்க பிணங்களாய் மக்கள்
பீதியில் நடுங்கி பிரிந்தது உயிரே
எங்கும் சொல்ல கொடுமையின் கதையை
என்ன தான் செய்ய முடிந்த எம்கதையை
முடியாது மறக்க என்றென்றும் எம்மனதில்
வடுவான காயம் முள்ளிவாய்க்காலில் நடந்தவை!