விருப்பத் தலைப்பு
இருப்போமா நாளை?
தாயக் கட்டை உருட்டலில்
அபாயச் சங்கொலி அன்னையைச் சுற்றி
அபயம் தேடி அழுகின்றோம்
அனைவரையும் கெஞ்சி
நித்தமும் குளறுபடி
நிம்மதிக்கு ஏதுவழி
நீதிக்கும் பெரும் பழி
சுத்திச் சுழழ்வதோ
சூது நெறி
கத்திக் கதறியும் கரையா விதி
கிட்டாதோ எமக்கான நிதி, நீதி
கவளச் சோற்றுக்காய்
உதிரும் காலம்
கண்ணீரால் கரைந்தே
அழியும் எம்கோலம்
மண்ணில் இருப்போமா
நாளை
காலன் எழுதி விட்டானே
முன்னேயே ஓலை
காப்புக்கு ஏதுவழி
கபடர் தருவாரோ மறுமொழி