சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

வாக்கு

ஜனநாயக வித்தே வாக்கு
இனவாதத்தால் விழ்ந்தது அதனின் போக்கு

வெறும் அரசு மாற்றமே இங்கு இலக்கு
அறுந்து தொங்குது
அந்தரந்தில் சமாதானம்

புரிந்து கொள்ளாப் பருந்துகளாயே
மூவின அரசியல் வாதிகள்
அரித்துக் கொல்லும் அவலத்தை
ஆணவரின் அடங்காச் சேட்டையை
சிரித்துக் கடந்திட முடியுமோ
சிந்தி மனிதா
சிதையேறு முன்னே

தொந்தி பெருத்தவர்
தோழமை கூட்டி
சந்து பொந்து
சடாரென நுழைந்து
கொள்ளையிட்ட பணத்தைத் தூவி
மலட்டுக் கொள்கைகள் கூவி
கொடுப்பதாய்ச் சொல்வர் ஆவி
கொடூரர் இவரோ பாவி
வென்றிட விட்டாலோ
வெல்லாது நீதி
தடுப்பதே தார்மீக நெறி
தந்திரமே அதற்கான பொறி

சொல்லாமலே போட்டுவிடு
வம்பருக்கு
செல்லாவாக்கு
நில்லாமலே போகட்டும்
நீசரின் செல்வாக்கு

மனோகரி ஜெகதீஸ்வரன்