திருநங்கை
பிறந்தாள் ஆணாய் ஆனால்
பிறழ்வால் உணர்ந்தாள் பெண்ணாய்
மறந்தும் இனிமேல் வாழாள்
மண்ணில் ஆணாய் மகிழ்வாய்
அறுத்தாள் அதற்காய் உறுப்பை
அவதிகள் பலவும் தாங்கி
திருநங்கை இவலென் தங்கை
திருச்சூடி மிளிரும் நங்கை
கருவழியே தானே வந்தாள்
கசப்பதுமேன் இவளும் சொல்வீர்
துணிந்தே வகுத்தாள் பாதை
தூர்ந்தே அழிய உபாதை
அணிந்து கொண்டாள் படிப்பை
ஆக்கி வென்றால் பலதை
ஆனாலும் குனிந்தே நிற்கின்றாள்
ஆதார மற்ற பயிராய்
பேணாது விட்டாலும் தப்பில்லை
பொசுக்காது விடுவீர் அவளை
இருட்டில் எந்நாளும் வாழ
ஏவாதீர் தீதைச் செயலால்
குருட்டு எண்ணம் கொண்டு
கொட்டாதீர் தீயைச் சொல்லால்
உருட்டு மதுவும் பின்னால்
உதிராப் பழியாகி நின்று
சுருட்டும் வாலைச் சொன்னபடி
சுதந்திரியாய் வாழட்டும்
அவளும் நல்லபடி
மனோகரி ஜெகதீஸ்வரன்.
பதியவில்லை