சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு215.

விடியல்
சுழற்சி வட்டம்
துப்பிய படையல்
கழன்ற இருளால்
காண்போம் விடியல்

காலை உறக்கம்
கனவுக் கிறக்கம்
வேலை மறப்பு
விரட்டும் பொறுப்பு
மாலை வரை மட்டுமே
கதிரோனுக்குக் கிட்டும்

எட்டும் ஏற்றமே எமக்கான விடியல்
முட்டிமோதா வாழ்வின்
முகவரித் தடயம்
தொட்டிடத் தொடரும்
வளக் குவியல்

தளர்வு தகர
தன்னம்பிக்கை கூட்டு
பிளவு நீக்கப்
பிடிப்பைக் காட்டு
உளவு பார்ப்போர் உறவை வெட்டு

கழன்று மறையும்
சுமைப் பற்று
சுழன்றே உழைப்பாய்
சூக்குமம் கண்டு
பழகிடு கூட்டமும்
பார்க்கும் அண்ணாந்து

இதுவோர் அனுபவ அதிர்வு
முதுமொழி வழிமொழிச் சான்று
அதுவழி நீயும் நின்று
புதுவழி காண்பாய் விரைந்து.

மனோகரி ஜெகதீஸ்வரன்