சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

எங்கள் இடர் இவ்வாறு தொடர்கிறது
இன்று வரை சுதந்திரத்தை பெற்று ஆண்டு எழுபத்திநாலு
என்ன வளம் இல்லை எம் இலங்கை திரு நாட்டில்
இருந்தும் நாம் தொடர்ந்தும் இடரில் கேட்டில்
மாண்பு மிக்க மகாராணி
ஆண்டு நீங்கள் சென்ற காலம் தொட்டு தொடராய் இடர்
எம்மவரே எம்மை சூறையாடியபடி
சூரியன் மறையாத சாம்ராஜ்சியத்து ராணியே
எமக்கு மட்டும் ஏன் சூரியனை காணாத தொடர் துயரம்