ஆள்மாறி போனாலும் ஆட்சி ஒன்றே
அவலங்கள்,பசி பஞ்சம் அகலுவது என்றே
எதிர்ப்பு அலை ஜன சக்தி திரண்டு எழுந்த போதும்
எல்லாம் புஷ்வாணம் ஆன கதை ஆச்சு
இலங்கை இனி அடைவு கடை நகையாகி போச்சு
எல்லா நாட்டிலுமே கடன் வேண்டியாச்சு
நகை மீட்ட சிக்கனம் உழைப்பிருந்தால் போதும்
நாட்டை மீட்க ஊழல் லஞ்சம்
ஒழியாது நாளும்
மீட்காத அமைவு நகை ஏலத்தில் போகும்
மீட்பன் இல்லா இலங்கை இனி
அடிமை நாடாய் மாறும்