சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத் தலைப்பு

பிடியரிசிக்கும் பெரும் பாடு
பிடித்தமானதுக்கும், அத்தியாவசியத்துக்கும் தட்டுப் பாடு
ஏறுமாறு நிகழ்வுகளால்
நாளும் வெட்டுப்பாடு
பண வேட்டை பதவிச் சேட்டை பெரும் சாட்டை
போர்க்களமாக்கி விட்டதே எம் நாட்டை

யார் கழித்திட வருவார் இத்தீட்டை
யாரழித்திட வருவார்
சங்கடக் கேட்டை