தொழிலாளி
பயன்தர உழைப்பவனே தொழிலாளி
பல்துறை வளர்வுக்கும் அவனே ஏணிப்படி
வியர்வை ஆற்றோடு தினமும் எதிர்நீச்சல்
விளையும் பயனோ
கிட்டாமல்
விம்மி வெடித்தே போடுவான் எதிர்க்கூச்சல்
தேயத் தேய உழைத்தும் தேவை தீரா நெருக்கடி
பாவம் அவனேன் இருக்கிறான் இப்படி
ஓடாய் தேய்பவனுக்கு இதுவோர் செருப்படி
படாய் படுத்தும் இதுவும் உலகை அறி
மேதினி உயர்வுக்கு அவனே கதி
மேலாய் அவனை மதி