சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 171

எதிர்ப்பு அலை

மாறுபாடு காணின் தோன்றும் எதிர்ப்பு அலை
வேறுபட்ட வழிகளில் சீறி
வீறுகாட்டுமது
மாறுகாட்டுவோர் முன் தோன்றி
சேருகூட்டமே நிகழ்த்தும் இவ்வீரிய வதை
ஊறுகொடுத்தவர் ஓடுங்கிச் சாயும் வரை

பொசுங்கிய உணர்வே
பின்னும் எதிர்ப்பு வலை
நசுங்கிப் போகுமதில்
நசுக்கியவர் தலை

பெருவீச்சாய் வீசுகின்றது எம்நாட்டிலும் எதிர்ப்பு அலை
சுந்தரம் சுதந்திரம் காக்கவே
அந்தரம்தரு வலைவீசுகிறோம் எதிராளிக்கு
நடுவீதியில் இறங்கிப்
பலமுறை
செய்திகள் அதைக் காவும் படை
சேர்ந்தே செய்திடக் கிட்டும் விடை
புலம்பெயர் எம்உறவுகளே வாருங்கள் ஒருநடை