மூண்ட தீ
கஞ்சிப் பானைகள்
களமேறக் காரணமென்ன
பிஞ்சுப் பாலகரும்
பிடிதேந்துகின்றனரே சுடரை
எஞ்சிய இவர்களும்
ஏந்தியவரே பேரிடரை
நெஞ்சும் வெடிக்குதே
நினைவுச் சுமையால்
மூண்டதீ இனப்பகை
மூட்டிய தீயே
மூண்ட தீயே
சுருங்கிச் சுடரானது
தீண்டிய அகோரத்தை
திசையெங்கும் துப்ப
மாண்டவர் நினைவை
மனதில் அப்ப
தாண்டவமும் ஆடுது
குழிமேடுகளில் முளைத்து
மனோகரி ஜெகதீஸ்வரன்