சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீசன்

விருப்பத் தலைப்பு

நீதிவழி நிற்பாருக்கே கேடிங்கு
நிம்மதியும் காணாது போனது சுருங்கி
மோதிச் சுழன்று மேனிலை கழன்று
மேய்ப்பன் இன்றிச் சுருண்டு
நாதியற்ற பரதேசிகளாய் நடுங்குகின்றோம்
நாளை ஏதென்ற வினாவினை விழுங்கி
போதி மரத்தடிப் புத்தரும் பெரும் பாவியானார் இவர்வழி
ஓதிச் சென்றது உண்பதற்கோ எமை
ஒப்பிட்டுப் பாருங்களேன் ஒருமுறை அதை

மனோகரி ஜெகதீஸ்வரன்.