கருத்துரைப்புக் கவி
வாரமொரு கவிஞர் திறனாய்வுக் கவிஞர் எனும்வளர்வோடு உலாவரும் சந்தம் சிந்தும் சந்திப்பே
கவிவரிகளை மட்டுமே வரியெடுத்துக் கொட்டவில்லை நீ
ஆய்வுக் கண்ணாலும் கொத்தி
நேர்த்தி கூட்டுகிறாய்
பாவையண்ணாவின் கவிக்கண்கள்
வரிஉணர்வுகளை நுகர்ந்து கவிநிலை சுட்டும்.
நம் ஆக்கம் அவர் நாவால் நற் கவியாய் பூக்கும்.
சொல்லடுக்கு பாவம் கொட்டி
கவிமேற்கோள் இடையிடையே காட்டி
சுவைத்திடவும் தூண்டி
தேவையான மாற்றங்களை
செப்பணிட்டு
கட்டமைப்பதும் பாவை அண்ணா பணி
சொல்,வரி வெட்ட்உம்
பூட்டலும் அதியற்புதமான
வர்மம்
எம் கவியும் குறைவிட்டு
களம் தொடும்
சந்தம் சிந்தும் சந்திப்பே
கவிப்பூப்புக்களின்
வளர்வுக்கான திறன் வெளியீட்டுக்கானா நால் அறிமுக விழா வைத்த தமிழாளரே
வாழ்த்தியே விடைபெறுகின்றேன்.
மனோகரி ஜெகதீஸ்வரன்