சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 241
07/11/2023 செவ்வாய்
தீப ஒளியே!
——————
ஐப்பசி,கார்த்திகை இணையும் காலம்!
அகிலமெலாம் தீபம் ஒளிரும் கோலம்!
எம்பசி தீரவென இணைந்திடும் நேரம்!
எப்போது தீருமென ஏங்கிடும் ஓலம்!
ஐப்பசி மாதம் அமாவாசைத் திதியில்,
அணைந்து வருமவ் வழகிய திருநாள்!
எத்திசை நோக்கினும் எரியும் தீபங்கள்!
எழுச்சி தந்திடும் தீபாவளி பெருநாள்!
கார்த்திகை மாதம் பிறந்திடும் பொழுதில்,
கனத்திடும் இதயம், நனைந்திடும் கண்கள்!
நேர்த்தியாய் எங்கும் நிமிர்ந்திடும் தீபங்கள்
நெஞ்சு கரைந்திடும் நீங்கா நினைவுகள்!
கார்த்திகை மாத கார்த்திகைப் பெருநாள்!
கண்ணாய் காத்திடும் கடவுளர் திருநாள்!
நேந்திர மரந்தரும் தண்டுகள் மீததில்,
நிரையாய்,அணியாய்,ஒளிருமே தீபங்கள்!
நன்றி
மதிமகன்