சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 235
26/09/2023 செவ்வாய்
“ வலை பூ”
……………
பின்னிவிட்ட இரும் பிடையே
பின்னின்ற கொடி யிடையாள்
மின்னலிடும் விண் மீனாய்
யன்னலால் தெரியும் ‘வலை பூவாய்!’
கோடியில் மலர்ந்த பூவில்
கூடியமர வண் டொன்று
தேடி வருமென் றஞ்சி-வலை
மூடி வைக்குமே ஓர்சிலந்தி!
வாலையவள் விரித்து விட்ட
வலைக் கண்ணில் தான் சிக்கி
‘’வலை பூவாய்’ ஆகிவிட்ட
வாலிபனை என்ன செய்ய!
செவ்விதழ் தான் திறந்து
செவ்வினிய மொழி பேசும்
பவ்வியப் பறவை யவள்
பாவியர்க் கோர் ‘வலை பூவாய்!’
முற்றத்தில் நின்ற மொந்தன்பூவை
முறித்து வலை வலையாய் சீவி
சுற்றத்துடன் பகிர்ந் துண்ண
சுற்றம் பெருகுமே ‘வலை பூவாய்!’
நன்றி
மதிமகன்