சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:234
19/09/2023 செவ்வாய்
தலைப்பு / தலைப்பூ
—————————-
திருவுக்கு திருமதியே சிறப்பு!
திருமதிக்கோ தலைப்பூ வனப்பு!
தெருவுக்கு வேண்டும் தலைப்பு!
தேடுவோர்க் குதவிடுமிக் குறிப்பு!

செய்திக்கு சிறப்பே தலைப்பு!
சேலைக்கு அழகு முகதலைப்பு
கொய்த பூவுக்கோர் சிறப்பு-
கோதை தலைமேல் இருப்பு!

ஒற்றைப் பூவுமோர் வனப்பு!
ஒன்றாய் கூட்டிடினும் சிறப்பு!
கற்றை முடிதனில் பூ தரிப்பு,
கவிஞர் கவிக்கோர் உயிர்ப்பு!

தலையில் தினம்பூ வைப்பு,
தரமாய் காட்டும் அமைப்பு!
மலையில் மிளிரும் மலைப்பூ,
மாற்றார் கண்ணில் மலைப்பு!

தலைப்பு தாளுக்குச் சிறப்பு!
தவறின் குறைந்திடும் மதிப்பு!
தலைக்கு அழகாம் தலைப்பூ!
தரமான வாழ்வின் தலைப்பு!
நன்றி
மதிமகன்