சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 180
28/06/2022 செவ்வாய்
“பிரிவுத் துயர்”
——————
வானொலிக்கு அமைந்த குரலொன்று
வாழாமல் போனதே ஒருபொழுதில்!
காணொலியில் காணும் முகமொன்று
காணாமல் போனதே கணப்பொழுதில்!

வான்வரை தினம் சென்று மீளும்
வண்ணமிகு இன் குரல் ஒன்று
ஏனிங்கு அது மீளவில்லை நன்று
எங்கு செனறு மறைந்தது அன்று!

கோசல்யா சொர்ண லிங்கமென
கோமகளாய் உலவி நின்ற தொன்று
ஈசல்போல் தன் இரு சிறகிழந்து
ஈசனிடம் செல்ல விழைந்ததே அன்று!

பழகிய பாங்கான குரல் ஒன்றை
பாமுகம் இழந்து பரிதவிக் கிறதே
இறுகிய மனத்துடன் நாமும் இன்று
இருகரம் கூப்புகிறோம்: சாந்தி! சாந்தி!!

நன்றி
மதிமகன்