சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 179
21/06/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
கோடை வந்தது! கோடை வந்தது!
——————————————
கோடை வந்தது! கோடை வந்தது!
கொள்ளை அழகுக் கோடை வந்தது!
பீடை நீங்கிய பிரபஞ்சம் தெரியுது!
பிஞ்சு இலைகள் பிறப்பும் காணுது!

வாடை தந்த குளிரும் அகலுது!
வண்ண மலர் வனப்பும் தெரியுது!
ஓடை நீரின் ஒலியும் கேட்குது!
ஒரே புத்துணர்வு உள்ளே பிறக்குது!

ஆடை மாற்றும் ஆசை துளிர்க்குது!
அழகுச் சிலைகள் ஊர்வலம் காணுது!
தாடை வரையும் மறைத்து நின்றது,
தாமே கொஞ்சம் கீழே இறங்குது!

தோடைச் சாறுக்கும் கிராக்கி ஏறுது!
தொலைப் பயணம் முனைப்புக் காட்டுது!
மூடைப் பணமும் கொஞ்சம் கரையுது!
மூளைக்கு சற்று ஓய்வும் கிடைக்குது!

நன்றி
மதிமகன்