சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 178
14/06/2022 செவ்வாய்
பாமுகமே! பாடுகிறேன் உன்புகழை!
———————————————
வெள்ளி விழாக் காணும் பாமுகமே!
வேண்டுகிறேன் உன்புகழ் உயர்ந்திடவே!
அள்ளித் தருவாயே அரும் தமிழை
ஆங்கில நாட்டிலினில் இருந்த வாறே!

வள்ளிக்கு முருகன் வாய்த்தது போல்
வாணியும் மோகனும் சேர்ந்த தனால்
புள்ளி மயிலெனத் தோகை விரித்து
பூவுலகில் பறந்த்டும் எம் பாமுகமே!

துயிலப் போகும் குழந்தைகளும்
துயிலை மறந்திடும் நின் வரவால்!
பயிலும்படிப்புடன் பல்கலையும்
பாங்குடன் வளர்ப்பாய் பாமுகமாய்!

நாட்டினில் நடக்கும் நிகழ்வுகளை
நல்லவை தீயவை எதுவெனினும்
நமக்கு தந்து வியக்க வைப்பாய்
நானிலம் சிறக்க உதவிடுவாய்!

செவ்வாய் மற்றும் வியாழனிலும்
செந்தமிழ் கவிதைகள் நீ தருவாய்!
கொவ்வை இதழ் கொண்ட அஞ்சுகமே
கோகில மங்கையே நீ வாழ்க!

தமிழெனும் தடாகத்தில் தாமரையாய்
தாரணி மீதினில் இதழ் விரித்து
அமிழ்தினும் இனிதாம் எம்மொழியை
அகிலம் முழுதும் நிலைக்க வைப்பாய்!
நன்றி
மதிமகன்