சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 174
10/05/2022 செவ்வாய்
“வளம் தரும் வாழை”
————————
வாழையிலே பல்வேறு இனமுண்டு
வகைகளின் எண்ணிக்கை பலவுண்டு
ஏழையின் வீட்டிலும் இதுவுண்டு
எங்கும் காணுமின்ற மரமொன்று!

கதலியும் இதரையும் பன்றியும்
கன்னல் சுவைதரும் கப்பலும்
இதந்தரு இதரையும் மொந்தனும்
இனோரன்ன பிற இன வகையும்!

விரதத்திற்கு வேண்டும் வாழையிலை
வீட்டில் விருந்திற்கும் இதே இலை
பருவ பண்டிகைக்கு பயன்படும் இலை
படைப்பதற்கும் கிடைக்குமே பச்சை இலை!

உடலுக்கு உதாரணம் வாழைத்தண்டு
உணவாகி மருந்தாகும் அரும் தண்டு
மடலிலும் உணவுண்ணும் வழமையுண்டு
மழமழப்பும் வழுவழுப்பும் கொண்ட தண்டு!

வாழையடி வாழ்கவென வாழ்த்துமுண்டு
வம்சம் பெருக்க வளமான குட்டியுண்டு
சேலையிலே பட்டால் செல்லாத கயருண்டு
சேதனம் கொண்ட செழிப்பான பயிரொன்று!

நன்றி
மதிமகன்