சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 173
03/05/2022 செவ்வாய்
தொழிலாளி
———————
உலகம் இயங்குது உன்னாலே
உள்ளம் மகிழுது தன்னாலே
அகிலம் முழுதும் பின்னாலே
அணியாய் திரளுது இந்நாளே!
உணவு தர உழவன் வேணும்
உலகு தழைக்க உழைப்பு வேணும்
துரவு எங்கும் துளிர்த்திட வேணும்
தூய்மை எங்கும் காத்திட வேணும்!
இரும்படிக்க ஒருவன் வேணும்
இருப்பதைக் காக்க பூட்டு வேணும்
கரும்பு வெட்டக் கத்தி வேணும்
களனி அமைக்க கருவி வேணும்!
கழுத்து மறைக்க நகைகள் வேணும்
கைகள் கனக்கக் காப்பும் வேணும்
அழுக்குத்துணி துவைக்க வேணும்
அலங்காரம் செய்ய ஆளும் வேணும்!
எல்லாத் தொழிலும் தொழிலெனக் கூறு
இதற்குள் வேண்டுமா ஏற்றத் தாழ்வு
மெல்லச் சாகட்டும் மேல்கீழ் மனப்பாங்கு
மேன்மை தந்திடுமே தொழில் பண்பாடு!
உலகம் கொண்டாடும் ஓர் நாளே!
உன் உழைப்புக்கு ஓர் நன்னாளே!
திலகம் வைத்திட்ட ஒரு பெருநாளே
தீராவலி தீர்த்திட்ட “மே” திருநாளே!
நன்றி
மதிமகன்