சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம். சிந்தும் சந்திப்பு
வாரம்: 204
13/12/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
சொல்லாய் ஒரு வார்த்தை!
—————————————
முல்லை வனத்தருகே
முட்கிழுவை தைக்கயிலே
பல்லால் பிடித்திழுத்து
பத்தியமும் சொன்னவளே!

வில்லை வளைத்திரு கண்
விழி அம்பு எய்கையிலே
சொல்லால் அடித்த அடி
சொர்ப்பனமாய் போனதடி!

எல்லை வேலியால் நீ
எட்டிப் பார்க்கையிலே
வல்லை வெளி போலே
வளருதடி அவன் கனவு!

வெள்ளை நிறத்தவளே
வெண்மதியாய் ஆனவளே
கிள்ளைக் குணத்தவளே
கிறங்குதடி ஓர் மனசு!

மெல்ல உன் வாய் திறந்து
மை விழியே நீ பேசு
கல்லை உரித்தேனு முன்
கையைப் பிடித் திடுவான்!
நன்றி
மதிமகன்