சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:230
22/08/2023 செவ்வாய்
தலையீடு
……………
கிழக்கில் வானம் வெளுக்கும்
கீச்சிடும் சத்தம் கேட்கும்
களத்தில் கதிரோன் உதிக்கும்
கார்முகில் குறுக்கே தடுக்கும்!

அதிகாலை பூவொன்று மலரும்
அதிலொரு வண்டும் அமரும்
சதிகாரக் காற்றங்கு வீசும்
சங்கடத் ‘தலையீடு’ அதிரும்!

அந்தியில் வானம் சிவக்கும்
ஆதவன் மேற்கே மறையும்
சிந்திடும் அழகு தெரியும்
சீறிருள் ‘தலையீடு’ போடும்!

பூமகள் மெத்தையில் புரளும்
புன்னகை மதியும் ரசிக்கும்
காமுகன் கருமுகில் மறைக்கும்
காணும் ‘தலையீடு’ வெறுக்கும்!

வாழ்வும் இயற்கைபோல் இருக்கும்
வாழ்கையில் ‘தலையீடு’ வெறுக்கும்
தேள்களும்,பாம்புகளும் கொத்தும்
தேவையின்றி நிம்மதியைக் கெடுக்கும்!
நன்றி
“மதிமகன்”