◦
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 228
11/07/2023 செவ்வாய்
“பாட்டி”
———-
அதைக் காட்டி இதைக் காட்டி
அம்புலியின் முகம் காட்டி
நிதம் நிதமாய் உணவூட்டி
நித்தி ரைக்குத் தாலாட்டி…..,
தத்துவக் கதை காட்டி
தன் கதைக்கு மெருகூட்டி
மெத்தன முகம் காட்டி
மேனிக்கு இதம் காட்டி…..
ஆட்காட்டி விரல் சுட்டி
அவரவரை இனம் காட்டி
நாட்காட்டி தினம் புரட்டி
நற்றமிழின் சுவை தீட்டி…..
படித்ததை பாடிக் காட்டி
பக்குவமாய் பொருள் கூட்டி
வெடிப்பது போல் கைதட்டி
வேண்டிடும் சுவை கூட்டி….
தோட்டம் துரவு காட்டி
தொழிலின் பெருமை ஊட்டி
பாட்டி மருத்துவம் மீட்டி
பலவும் செய்வாள் என்பாட்டி!
நன்றி
மதிமகன்