சந்தம் சிந்தும் கவிதை

மட்டுவில் மரகதம்

பிரபஞ்சம் எல்லாமே!

குல விளக்காக குடும்பமாகி வாழ
மனம் கொண்டேன்
மணமாக
விரும்பினேன்
மனமார உன்னோடு
குலம் வாழ

எண்ணினேன் நீ துணையாக
இன்றைய நாள் வரை
அது இனிக்கும் நினைவாக.
என்வாழ்வில்

புத்தம் புதிய காலையில்
பொன்நிறவேளையில்
தினம் தோன்றும் சுபராகம்
எந்நாளும்
ஆனந்தம்
எண்ணினேன்
கொண்டாட
திடம் கொண்டேன்
உன்னோடே
உனக்கேற்ற துணையாக
குலவிளக்காக
நான் வாழ
இணையாக
எந்நாளும்

இனிய அனுபவமாக
எந்நாளும்
அழியாத
அன்பான
துணையாக உன்னோடு இருக்க
வேண்டினேன் அவனருளை
இணையாக இன்றும்
நினைவோடு இணைவாக
கேட்டேன் பிரபஞ்சத்தை
நம்பினேன் அவனருளை
பெற்றேன் உடனே
புரிந்தேன் எல்லாமே
அதுதான்
பிரபஞ்சம் !
அனைத்தையும் பெற
ஒன்றாக தர
இருக்கிறவர்
ஒருவர் தான்
என்று இன்று
உணர்ந்தேன் தனியனாகி
புரிந்தேன் எனை நான் ஆள
முடியாது என்று எண்ணங்கள் எல்லாமே ஈடேறாது என்று.
அறிந்தேன் ஆறுதலானேன்
வாழ்த்துகிறேன்
வளமோடு
நீள் ஆயுள்
புகழோடு
நீர் வாழ
வளமோடு
எல்லாமே பிரபஞ்சம்
என்றோ முடிந்த முடிபு