சந்தம் சிந்தும் கவிதை

மட்டுவில் மரகதம்

மனிதத்தின் அறுவடை..

சந்திக்கின்றான்
சிந்திக்கின்றான்
சிறக்கின்றான்
சிரித்து மகிழ்கின்றான்.
பகுத்து தொகுக்கிறான்.
பார்த்து புரிகின்றான்.
பார் புகழ வாழ்கின்றான்.

வளர்கின்றான் மகிழ்கின்றான்
உயிரோடு வாழ
உண்கின்றான்
எண்ணுகிறான் அதை அடைகின்றான்

கூடி கலந்து
தன்னை மறந்து
தனி இன்பம் அடைகின்றான் பேரின்பம் காண்கிறான்

விஞ்ஞான வழியில்
பிறந்தவன் இறக்கின்றான்

மெய்ஞான வழியில்
தோன்றியவர்கள்
பயல்கின்றான்
பக்குவம் பெறுகின்றான்
மனம் அமைதியுடன்
மறைகின்றான்
இறையுடன் கலக்ககின்றான் அதனால் மனிதப்பிறப்பின்
பயனை அடைகின்றான்