சந்தம் சிந்தும் கவிதை

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்
தலைப்பு பெற்றோர்!

பெற்றுள்ள பேறில்
பெரும் பேறு பெற்றோர்
பெறாவிட்டால் படும்பாடு பிள்ளைச் சேல்வம் அற்றவர்
கொஞ்சமா? அது
எத்தனை தலையிடி எம் இனத்தில் எமக்கே எல்லோரும் தருவர்
விடுவார்களா
சும்மா இருக்க ,
ஒரு மூச்சு சுகமாக விட,
பிள்ளைச் செல்வம் இல்லாவிட்டால் அது புரியும் அந்த என்ன வலி என்று,

தாய். தந்தை, பாட்டி, பாட்டன், பூட்டி, பூட்டன் என்றெல்லாம் பெயர் பெற்று
பேரின்ப வாழ்வு பெற்றோரே பெற்றோர்
பல பதவி வகித்தாலும்
பெரும் பதவி என்பதும் பெற்றோரே!
பெற்றவருக்கு புரியும்
பிள்ளை மனம்
பெறாதவர்க்கு புரியும் கல்லுமனம்
பணிவும் பண்பும் அன்பும் பரிவும் மகிழ்வும் என்று அனைத்தையும் பெற்றோரே! பெற்றோரே

நன்றி வணக்கம்!