சந்தம் சிந்தும் சந்திப்பு264
“அழகு”
காளை பருவத்து தாகம்
கன்னியர் மேல் எழும் மோகம்
வேளை விடும் பள்ளி நேரம்
வீதியில் தாவும் என் காலும்.
கட்டழகு கரு மேனி
கரைகளில் நீள் முடி தாவி
வட்ட பிறை முகம் காவி
வதனம் நிறை குட பாணி..
கண்ணில் அவளது கோலம்
காணாத வேளையும் ஜாலம்
எண்ணி மனம் நிதம் ஏங்கும்
இதயத் துடிப்பும் பேர் கூறும்.
ஓன்றாய் பணி செய்ய காலம்
ஒன்றிய தால் காதல் வேகம்
நன்றாய் அவ ளூடும் ஏறி
நகமும் சதையுமாய் தேறி
வீறான காதலுக் ஊறு
விளைத்து போர்புல பேர்வு
ஆறாத மனக்கண் துயரம்
ஆற்றியது வந்த வதிவு உரிமம்
அழகினை நிதம் ஒன்றி பருகி
ஆனந்த வெள்ளத்தில் முழுகி
பழுத்தது தேகத்தில் முதுமை
பாசம் மகளில் தாவி முழுமை.
ப.வை.ஜெயபாலன்