“பொல்லாத புது நோய்கள்”
மாலை நாலு மண் தொடக்கம் படாதபாடு
மறுகாலை விடியலிலே வந்தோம் வீடு
காலை முதல் சுற்றுலாவில் இணைந்த பிள்ளை
கை தூக்கி உடை மாற்ற முடியவில்லை
வாலை இளம் பருவத்தாள் உடலில் ஏதும்
வருத்தம் என்று படுத்ததில்லை எந்த போதும்
Call எடுத்து சொல்ல அம் புலன்சர் வந்து
கொண்டு சென்றார் அவசர சிகிச்சைக் என்று.
குளிர் கூடி வலதுகரம் அசைவு இன்றி
குமுறலுடன் மனைவி அங்கு கண்ணீர் சிந்தி
தளிர் பருவம் மூளைவழி நரம்பு தூண்டல்
தடைப்படவும் வழி இல்லை கடந்த ஆண்டு
எறிதல் ஒத்த விளையாட்டில் ஏதும் ஊறு
ஏற்பட்ட கையும் இல்லை ரத்தம் யூரின்
கதிர் எக்றே ஸ்கானிங் சோதிப்பென்றார்
காட்டுகிற பெறுபேறு திருப்தி என்றார்
கை இன்னும் அசைவில்லா நிலை தொடர்வு
கண்டறிய மூலத்தை விடா முயல்வு
ஒய்யார உடற்கட்டு உழைப்பு ஊரில்
உடன் இறைச்சி இலை கனிகள்
உண்டோம் சீரில்
கை ஆற நேரம் இல்லா உழைப்பு ஓட்டம்
கடை உணவின் பதம் ருசியில் எமக்கு நாட்டம்
பொல்லாத நோய் புதிதாய் உடம்பில் ஏறி
போகுது பார் நொடிக்கு நொடி உயிரை வாரி….