வியாழன் கவிதை

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல.526
***** சித்திரை*****
சித்திரையாள் வருவாள், முத்திரை பதிப்பாள்.
சத்தியமாய் அவள், சர்வமும் காப்பாள்.

சுற்றிடும் இடர்களை, வெட்டியே எறிந்திடுவாள்.
சுகந்தமாம் வாழ்விற்குத் , தூபமும் இடுவாள்.

வெற்றிகள் குவிக்கவே, வழிகாட்டியாய் நிற்பாள்.
வீணரின் செயலுக்குத், துறட்டியாக இருப்பாள்.

நயமது கிடைக்கவே, நாற்றிசையும், நல்மாரி பொழிவாள்.
தனம் , தானியம், யாவையுமே , தாராளமாகச் சொரிவாள்.

மனம் வைத்தே மகிழ்வோடு, உலகிற்காய் உழைப்பாள்.
மதிநுட்பத் திறனாலே, மகுடத்தை ஏற்றுவாள்.
பொன்.தர்மா