வியாழன் கவிதை

புனிதா கரன் UK

கல்விச் சிறப்பு
———————-
[புனிதா கரன் UK]

தன்னிகரில்லாக் கல்வியை
தடையின்றி கற்று//
விண்ணும் விஞ்சிடும்
வித்தகனாய் மிளிர//
கரையில்லாக் கல்வியை
கரையின்றி கற்றிடுவாய்//
செல்வத்தில் சிறந்த
செல்வ மதனை//
எந்நிலை வரீனும்
ஏற்புடன் ஏற்றிடு//
பேதமின்றி ஒன்றிணைந்து
பேரறிஞனாய் திகழ்ந்திட//
சான்றோன் வாக்கை
சவாலாய் ஏற்றிடு//
பிறப்பு முதல் இறப்புவரை
பின் தொடர்ந்திடுமே//
கற்ற கல்வி
வழி வாழ்ந்தே//
மனித நேயமிகு
மாந்தனாய் வாழ்ந்திடு//
பெற்றவள் பேரீன்பமுற
போற்றீடும் வையகமே//

புனிதா கரன்
UK
01.12.2022