வியாழன் கவிதை

புனிதா கரன் UK

மழை
———

மேகத்துடன் முட்டிமோதி
மெல்ல நகர்ந்து//
மலையின் மேல்
மதமதப்பாய் வழிந்து//
நீர் நிலைகளில்
சங்கமித்து ஓடுகின்றாய்//
துளித் துளியாய்
சிந்திடும் மழையே//
வரட்சியைப் போக்கிட
வரமாய் வந்தாயே//
இயற்கை செழித்திட
இன்னருள் புரிந்தாயே//
நீ இன்றியே
நித்திலம்தான் மகிழுமா??//
தரணி இன்று
தரமிழந்து போனதே//
மானிடச் செயலோ
மாசுபடுத்திட உலகை//
வெப்பந்தான் அதிகரித்து
வேதனயை கொடுக்குதே//
தவறாமல் நீபொழிந்தால்
மண்ணுயிர்கள் மகிழ்ந்திடுமே//

புனிதா கரன்