வியாழன் கவிதை

புனிதா கரன் UK

தைப் பொங்கல்
————————-

தமிழர் திருநாளாம்
தை திங்களிலே//
சாதிமத பேதமின்றி
களித்திடுவோம் அந்நாளை//
உலகிக்கே உணவளிக்கும்
உழவனுக்கு உதவிடும்//
கதிரவனைப் போற்றி
கால்நடையை வணங்கி//
நன்றி கூறிடும்
நலமிகு பெருநாளே//
பழையன கழிதலும்
புதியன புகுதலுமென//
எம்மில் உள்ள
தீயகுணங்களை அகற்றி//
நற்குணங்களை வளர்த்திடல்
சாலச் சிறப்பே//
தை பிறந்தால்
வழி பிறக்குமென//
நம்பிக்கை வளர்த்திட
நல்வாழ்வும் மலருமே//
வள்ளுவன் போற்றிய
பெருமைமிகு தொழிலாம்//
உழவு தொழில்தனை
உளமகிழ்ந்து போற்றி//
பண்பாட்டு விழுமியமும்
பாரம்பரிய சிறப்பும்//
பொங்கி மகிழ்ந்திடவே
பொங்கலைக் கொண்டாடுவோம்/

நன்றி
புனிதா கரன்