அந்த ஒற்றை மணிக்காகவே
காத்திருப்போம்
அவர்கள் கல்லறை நோக்கியே
நாம் நகர்வோம்.
அடித்த மணி ஓய்வுகொள்ள
நாமும் அமைதிகொள்வோம்
அந்த உன்னதமானவர்களை
மனமிருத்தி தொழுதே நிற்போம்.
நிரம்பி வழிகின்ற
கண்ணீர் துளிகள்
கல்றைகளை நனைக்க
காவியநாயகர்கள் கண்திறப்பார்.
தணியாத தாகத்தோடு
அணியாக நின்றவர்கள்
பணியாத வீரம்காட்டி
மண்ணின் மணியாகி
மகத்துவம் ஆனார்கள்.
கார்த்திகை மாதம்
எங்களின் கண்ணியமாதம்
எமக்காக உயிர்தந்த
உன்னதமானவர்களை
உள்ளத்தில் நினைந்து
உருகும் மாதம்.