ஊட்டி வளர்த்த உன்னை
ஒருமுறை பார்க்க ஆசை!
வாட்டிய வறுமையிலும்
காட்டிய உனது அன்பு
நீட்டிய என் வாழ்வில்
நிலைத்தே இருக்குதின்றும்.
அழகளகாய் கதைசொல்லி
ஆராரோ பாட்டிசைத்து
மடியில் என்னை தாலாட்டி
தூங்கவைச்ச நினைவுகள்
தூங்காமல் இன்றும் எனக்குள்ளே!
நிலா காட்டி சோறு ஊட்டி
ஆளாக்கிவிட்ட என் பாட்டி!
நீ தந்த பாசங்கள்
நித்தமும் வேண்டும் எனக்கு.
மீண்டும் ஒரு பிறப்பில்
உன் அரவணைப்பில்
நான் வளர்ந்திட பாக்கியம்
தந்திடு என் அன்பு பாட்டியே!