சிரிப்பு!
சில சமயங்களில்
எனை விட்டு
பிரிந்துபோன எந்தன் சிரிப்பு
இன்று என்னை விட்டு
மரிந்தே விட்டது.
உதிர்ந்து உதிர்ந்து
வெறுமையாகிப்போன
இலையுதிர்கால மரமாய்
எனக்கான வாழ்வின்
பிடிப்புக்களும் மெல்ல மெல்ல
உதிர்ந்து உதிர்ந்து
இன்று நானும் அந்த
இலையுதிர்த்த மரமாகவே
வெறுமையாய் நிற்கின்றேன்.
மீண்டும் என்னால் தளைத்தெழ
முடியுமென்ற நம்பிக்கைகள் கூட
நீ சிரித்து சிரித்து போட்டுவிட்டு
சென்ற வேசங்களிற்கு பயந்து
மொளனமாய் எங்கோ ஓர் மூலையில்
ஒளிந்தே கிடக்கின்றது.
பூட்டிக்கிடந்த என் மனச்சிறைக்குள்
நீயாகவே புகுந்துவிட்டு
நீயாகவே புறப்பட்டாய்.
நான் நானாக இருந்தபோது
நன்றாகவே இருந்தேன்.
என்று உனக்காக நான் என்ற
உணர்வுக்குள் நுழைந்தேனோ
அன்றே என்னிடமிருந்த
எல்லாமே காணாமல் போனது.
சிரித்து சிரித்து என்
சிரிப்பையே அழித்தவளே!
விரும்பி விரும்பி என்
விழிகளை நனைத்தவளே!
நெருங்கி நெருங்கி என்
நேர்மையை அழித்தவளே!
விலகி விலகி என்
வழ்வையே மறைத்தவளே!
என்னில் இருக்கும்
உன் நினைவுகளை
மறந்துகொண்டே இருக்கின்றேன்.
ஏதோ ஒரு விடுதலையை
தேடியபடியே என் வாழ்வு
நகரவேண்டும் என்று
தலையில் எழுதப்பட்டவனாய்
பிறக்கவைத்த பிரம்மாவே!
உயிர்குடிக்கும் எத்தனையோ
ஆயுதங்களால் நான் கண்ட
வலிகளை காட்டிலும்
காதல் என்ற உணர்வால்
பட்ட வலிகளே பெரிதாக
இன்றும் என்னை கொல்லுதே.
தான் வாழ்ந்தது போதும்
என் கணக்கை முடித்துவிடு.