சந்தம் சிந்தும் கவிதை

பத்மலோஜினி திரு

வணக்கம் master🙏வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 233

தலைப்பு – தலைப்பூ

எத்தனையோ தலைப்பூக்கள் அத்தனையும் அழகானவையே
சந்தம்சிந்தும்சந்திப்பு நிகழ்வால் மாற்றங்கள் சிறப்பானவையே
கருத்துக்களை கருவாக கவிவடிக்க விரையுது
கண்களில் காவியங்களாய் காதலால் இதயங்கள்

காட்சிப் பொருளாய் கவர்ச்சிப் பொருளாய்
காதலனால் கனவனால் கலங்கித்தானே போகிறார்கள்.
பேதையை போதையாக பேரின்பம் காணத்துடிக்குது
மேதையான மேல்லோர்களே மேன்மையுடன்
நடக்கவில்லையே.

பார்போற்ற வாழவில்லை பார்ப்போரும் வாழ்த்தவில்லை
கார்மேகங்கள் மறைந்தாலும் கார்காலம் மாறினாலும்
கருவறையில் இருக்கும்வரை இவள்பலம் தெரியவில்லை
கரும்புள்ளிகள் வருமென்று தலைப்பூவும் காட்டியதில்லை.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
19/09/2023