கவி இல(64. 14/07/22
பூமிப் பந்தில் நானும்
கருவினிலே உருவாகி நானாகி
யாவும் எமதாகி மலர்ந்த
மனித நலம் மாண்படைய
பண்போடு நாம் வாழ்ந்தோம்
அன்பிற்கு இலக்கணமாய்
பகை உணர்வை நாம் களைந்து
அன்றாடம் வளர்ந்த உறவில்
பாசத்தைப் பொழிந்தே வாழ்ந்தோம்
காலச் சுழற்ச்சியிலே பெரும் மாற்றம்
சுயநலத்தால் என் நலம் கொண்டேன்.
பாகுபாடு பிளவு பிணக்குகள்
எமதெல்லாம் எனதாக்கி பெரு மகிழ்வு கண்டேன்
ஆசை வளர்த்தேன் ஆணவத்தால் சிலிர்த்தேன்
வேற்றுமைகள் நிறைய ஒற்றுமை குலைய
பகை போர் நோயென்று
உலகமே ஆட்டம் கண்
வேண்டாமே இந்த வாழ்வு
உள்ளங்கள் ஒன்றாய் இணர்ந்திடவே
உலகெல்லாம் நிலையன்பு துலங்கிடவே
பாகுபாடு நாம் வெறுப்போம்
பகிர்விலே சமத்துவம் காண்போம்்