(26/01/23 கவி இல(87)
மாற்றங்கள் நிரந்தரமல்ல
கோடி விண் மீன்கள் வானில்
கொட்டிக் கிடக்கு
கோடி மக்கள் வயிறோ பசியால்
ஒட்டிக் கிடக்கு
உள்ளவனுக்கு உயர உயர
செல்வம் கொட்டுது
இல்லாதவனுக்கோ ஓட ஓட
வறுமை விரட்டுது
மழையின் பார்வையில்
ஏற்றத் தாழ்வில்லை
மனிதன் பார்வையோ
ஏற்றத் தாழ்வின் எல்லை
எண்ணிலடங்கா நோய்கள் பெருகிட
புதிய நோய்கள் மலிந்திட
பண்பாடு சிதைத்த மானிடமோ
தனக்குத் தானே தீர்ப்பெழுதி
மரணத்தை நோக்கி விரைந்தோடுது
நிரந்தரமற்ற வாழ்வின் ரசனைக்கு
முற்றுப் புள்ளி வைப்போம்
மரத்துப் போன மன நிலையினருக்கு
உணர்வூட்டி வாழ்த்துவோம்.
நன்றி வணக்கம்.