கவிஇல (86) 15/12/22
மனிதம் புனிதமாக
******************
மாண்பு போற்றும் மார்கழியில்
மண்ணில் மனித நேயம் மலர
கருணை உள்ளம் கொண்ட மாபரன்
மனித மனமெனும் மயக்க நிலங்களில்
கருணைப் புவனம் குழுமிப் பூத்திட
அலைகள் தொடுத்திடும் கடலின் ஞானமாய்
நுரைகள் பூத்திடும் பாலின் வெண்மையாய்
இரவைத் தேற்றிடும் நிலவின் தண்மையாய்
மாபரனே நீர் வரவேண்டும்
சிறுபான்மை இனமழிய
சினத்தோடு செயல் பட்டு
நித்தமும் உரிமைகள் சீரழித்து
சுயநலப் போர்வை போர்த்து
ஆட்சியதிகார பதவி மோகத்திலே
தானென்ற அகந்தையிலே
பகிரா மனம் கொண்டு
வாழுகின்ற மனிதர்கள் மாற வேண்டும்
சம தர்மம் நிலவ சமத்துவமோங்க வேண்டும்
சாதி இன மத பேதமகல
அன்பு மலர்கள் பூக்க வேண்டும்
வேற்றுமை நீங்கி ஒற்றுமை வளர
மாபரனே வாராயோ அருள் வரம் தாராயோ