வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல (113) 07/09/23
எழுத்தறிவில்லையெனில்
**********************
எழுத்தறிவில்லையெனில்
யாமிங்கே ஒன்றுமில்லை
‘அ ‘என்ற முதல் எழுத்தே
அம்மா என்றழைக்கும் பல மொழிக்கும்
மூல தனமாய் அதுவே

அன்பிற்கு ஆதாரமாகி
அறிவுக்கோர் பாடமாகி
மண்ணில் வாழ் மாந்தர்க்கு நற்,
பண்புதனை ஏராளமாய்
கற்றுத்தந்த எழுத்தறிவை நாம்
கண்ணின் மணியெனவே
போற்றிடல் வேண்டுமன்றோ

கற்பனையும் காவியமும்
கவிகளுடன் இலக்கியமும்
நற்றமிழால் அறிந்திடவே எமக்கு
எழுத்தறிவு வேண்டுமன்றோ

தனி மனித ஆளுமையும்
கூட்டணியின் ஒற்றுமையும்
இணைந்தேதான் இயங்கிடவே எமக்கு
எழுத்தறிவு வேண்டுமன்றோ

பாட்டறிந்தும் படிப்பறியா
ஏடறிந்தும் எழுத்தறியா
எத்தனையோ பாமரர்
இன்றும் இப்பாரினிலே

அறிவுக் கண் திறக்க
எழுத்தறிவை எடுத்தியம்ப
ஊக்குவிக்கு்ம் ஆசான்களைப்
போற்றிடுவோம் இந்நாளிலே

நன்றி வணக்கம்.