வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல(112) 31/08/23
மை என்ற ஓரெழுத்து******
பொறாமையில் எழுவது தீமை
தீமையால் விளைவது பகைமை
பகைமையில் எழுவது கொடுமை
கொடுமை கொடுப்பது இல்லாமை

இல்லாமை தருவதோ வறுமை
வறுமை தருவதோ கல்லாமை
கல்லாமையால் வருவது அறியாமை
அறியாமை தருவதோ ஏழ்மை

ஏழ்மையால் வருவதோ தாழ்மை
தாழ்மையால் ஏற்படும் வாழாமை
வாழாமையால் வரும் தனிமை
தனிமையில் தொலைப்பது இனிமை

இனிமை தருவது வளமை
வளமை தருவது கடமை
கடமையில் கொள்வது உண்மை
உண்மையின் கொள்கை மாறாமை

மாறாமை வந்திடின் நீங்கமை
நீங்காமை இருந்தால் ஒற்றுமை
ஒற்றுமையால் விளைவது நன்மை
நன்மையால் பெறுவதோ பெருமை …..

நன்றி வணக்கம்