கவி இல (110) 20/07/23
விடுமுறை வந்தாலே
விடுமுறை நாட்களை
எண்ணியபடி எப்போ வருமென
காத்திருந்த காலம் அன்றுற
வேலைப் பளு தொல்லையில்லை
விடுமுறையென்றாலே
சந்தோச ஆரவாரம் ,பிள்ளைகளும்
குதூகலமாய் துள்ளிக் குதிக்க
வீடே களை கட்டும்
உடுக்க படுக்கவென்றே
பொட்டலங்கள் கூடவே
கட்டுச்சோறுங் கட்டிக்கொண்டுஐ
வழிப்பயணத்திலே
கொறிக்க குடிக்கவென்றே
பலதையும் சேர்த்தெடுத்து
ஒரு ஊர்தியிலே
செல்வோம் பயணம்
மீண்டும் சென்றிடவே
மனமும் ஆவல் கொண்டிடுதே
நன்றி வணக்கம்