வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல(73). 14/09/2
தலைப்பு. தீராக் கொடுமை

நெஞ்சினில் கொஞ்சமும் ஈரமில்லை
நேர்மையோ சிறிதும் இல்லை
உதவிடும் உள்ளம் இல்லை
மதித்து வாழும் எண்ணமுமில்லை

இருள் சூழ்ந்த நெஞ்சங்கள்
ஏய்த்துப் பிழைப்போர்க்கும் பஞ்சமில்லை
எங்கும் லஞ்சம் எவரிடமும் நீதியில்லை
ஆதரிப்போரும் யாருமில்லை

எத்தனை கொடுமைகள் சமுகத்திலே
ஏழை இனம் தினமும் வேதனையில்
அல்லலுற்று அவதியுறும் வேளையிலும்
காணாதோர் போல் விலகிச் செல்லும் மனிதர்கள்

பணத்திலே மிதப்போரும்
பதவியில் திளைப்போரும்
நினைத்ததைக் கண்முன்னே
நிதர்சனமாய் கண்டு களிக்க

துன்பத்தைப் கண்டு தூரமே் நின்று
வேடிக்கை பார்க்கும் விந்தை மனிதர்
பாரினில் இருக்கும் வரை
மாறாது கொடுமை தீராது ஏழ்மை .