வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல(67). 04/08/22
அன்றும் இன்றும்
அன்று
அளவுக்கு மிஞ்சிய பணமும்
அடங்காத் திமிரும் ஆணவமும்
அளவிலா நோயும் கண்டதில்ல
அடுத்தவர்க்கு உதவும் எண்ணமுடன்
பெருகியே தழைத்து செழித்திருந்த உலகு

உண்மையை ஓங்கி உரைத்து
ஊக்கமாய் விரும்பி உழைத்து
உணவே மருந்தாக அளவோடு உண்டு
வளமோடு வாழ்ந்திருந்த மக்கள்

நிழல் படர்ந்த சோலைகள்
நீள் பயண பாதங்களுக்காய்
நீளக் காத்திருக்க காலாற நடந்த சென்று
உடல் நலம் பேணியே காத்திட்ட மனிதர்
இன்று
பகட்டுக்கு வாழ்ந்து பயனிலா பொருள் சேர்த்து
திகட்டும் அளவுக்கு உணவினைத் தினம் உண்டு
மருந்தே உணவாகி உடல் நலம் தொலைத்து
தளர்வோடு வாழ்கின்றனர் ஆயுளைக் குறைத்து

அறிவை வளர்க்கும் ஊடகங்கள் மௌனிக்க
காக்க வேண்டிய அரசுகள் களவாட
விடியலுக்காய் ஏங்குகின்ற மக்களினம்
தெருவோரம் காத்துக் கிடக்கு வரிசையிலே..