கவி இல (63). 30/06/22
இன்னுமா புரியவில்லை
பசியாற பால் சோறு
புரண்டு படுக்க பஞ்சு மெத்தை
மின் விசிறி காற்று
இருள் நீக்கி ஒளி கொள்ளும் வாழ்வு
சொகுசு ஊர்தியிலே உல்லாச ஊர்வலம்
சிந்தையிலே சிறகடிக்கும் சல்லாப வாழ்வு
குடியும் குடித்தனமாய் விருந்துபச்சாரம்
மக்கள் பணத்தை சூறையாடி விளையாடும் வாழ்வு
உன்போன்ற வர்க்கம் இல்லாதிருந்திருந்தால்
சீரழிந்த நாடென்ற இழி நிலையின்றில்லாதிருந்திருக்கும்
ஆட்சி தந்த மாற்றம்
அரிசி பருப்பு விலையேற்றம்
குப்பி விளக்கேற்ற எண்ணெய்க்குப் பஞ்சம்
வரிசையிலே காத்து நின்று சோரும் நெஞ்சம்
இன்னும் ஏற்றம் காணும் விலை வாசி. நாளை
உன்னையும் தெரு வாசியாக்கிடலாம். எனவே
காலாற நடக்க கற்றுக் கொள்
மண் குடிசையில் வாழ ,தென்றல் காற்றை சுவாசிக்க
குப்பி விளக்கையேற்ற ,பால் நிலா ஒளியில் பாயில் படுத்துறங்க
கற்றுக் கொள் அப்போது புரியும் சாதாரண மக்கள் வாழ்வு
இதுதானென்று….