கவி இல( 61). 09/06/22
தலைப்பு
அன்றிட்டதீ நிழலாடும் நினைவுகள்…
ஆசியாவினமிகச் சிறந்த நூலகம்
ஈழத் தமிழரின் பெருமை மிகு அறிவாலயம்
தமிழ்மண்ணின் கல்வியறிவுக்கான ஆதாரம்
தீமூட்டி அழித்ததனால் பெரும் சேதாரம்.
தமிழின அழிப்பின் அடையாளமாய்
யாழ்நூலகத் தீ மூட்டல்
நாலு பத்து ஆண்டுகள் கடந்திடினும்
நிழலாடும் நினைவுகளாய் மனதுகளில்
பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம்
பல்நூற்றாண்டு பழமை வாய்ந்த
காகிதப் பூக்களிலே தேன் சுவைத்து மகிழ்ந்த நாட்கள்
நிழலாடும் நினைவுகளாய் மனதினிலே
தொண்னூற்று ஏழாயிரம் நூல்கள்
மருத்துவம் இலக்கியம் சோதிடம்
இன்னும் பல ஓலைச் சுவடிகளென
அழிந்து போன பொக்கிசங்கள் ஏராளம்
பல்துறை சார் அறிஞர்களால்
தீட்டப் பட்ட காவியங்கள்
எரியூட்டி சாம்பலாகும் வேளையிலே
நேரில் கண்ட தாவீது அடிகளார்
உயிழந்த சேதி நூலகப் பெறுமதிக்கு
அழியாத சாட்சி.