வியாழன் கவிதை இல(57) 22/4/22
போராட்டம்.
மனதின் போராட்டம் மனிதனை வாட்ட
மக்கள் போராட்டம் உலகையே ஈர்க்க
துன்பமில்லா வாழ்க்கையில்லை
நெருப்பில்லா வேள்வியில்லை.
புயலுக்கும் பூகம்பத்திற்குமிடையே
புரியாத போராட்டப் பயணம்
பூமிக்கடியில் இடம் பிடிக்க
புவிமேலே நடக்குது பெரும் போராட்டம்
மண்ணுக்காய் ஒரு புறம்
மண்ணெண்ணைக்காய் மறு புறம்
மாந்தரெல்லாம் தவிக்கக் கண்டு
புரிந்தோர் புரிகின்ற போராட்டப் பயணம்
நல்லது கெட்டது எதுவென அறிந்து
ஆராய்ந்து செயல்பட மறந்து விடாதே
கடந்து போக கற்றுக் கொள்,
காயங்களுக்கு நியாயம் தேடாமல்,