வியாழன் கவி இல(55)
அதனிலும் அரிது
மானுடப் பிறப்பு அரிதிலும் அரிது
அதனிலும் அரிது இயற்கையோடிணைதல்
உடல்நலம் காத்து,மன நலம் பேணி
சிறப்பொடு வாழ்தல் அரிதன்றோ
அதனிலும் அரிது மாசற்ற வாழ்க்கையில்
தூயதோர் அன்பும் ,உண்மை நேசமும்
பொன்னென மிளிரும் மதிப்புள்ள வாழ்வும்
வழுவில்லா நேர்மை உழைப்பும் அரிதன்றோ.
சுத்தம் சுகம் தரும் மாசடையா சூழலிலே
நோயுற்ற வாழ்வும் இருளாகுமே
விளக்கில்லா வீதி போல
பொது நல நோக்கோடு தன்னார்வ சேவையாற்றின்
அதனிலும் அரிது வேறேது.
சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம்
சுகாதாரம் ஆதாரமானால் பத்திரமாய் வாழலாம்.
நோயில்லா வாழ்வும் நொடிந்து போகா மனமும்
கொண்டு அதனிலும் அரிதாக
வாழ்க்கைப் புதிருக்கு விடை தேடி
வாய்ப்புக்கள் வரும்போது கையலேந்தி
தன்னலமற்ற சிந்தையோடு
சமுதாயத்தை செப்பனிடல்
அதனிலும் எதனிலும் அரிதன்றோ…..
நன்றி வணக்கம்