கவி இல(83) 01/12/22
விடியலைத் தேடி
மனிதம் எங்கே மனித மாண்பு எங்கே.
மனிதனே மனிதனுக்கு எதிரியா
இறைவனின் திட்டம் இதுதானா?்
சிங்கார வனம் ஒன்று வேண்டும்
தேவனோடு நான் உரையாட வேண்டும்
மனிதம் அங்கே மலர வேண்டும்
அன்பு அதில் குடி கொள்ள வேண்டும்
நாகரீக வளர்ச்சி மேலோங்ஙிட
மானிட மாண்மை குன்றிவிட
விடியலைத் தேடுகின்றோம் கிடைக்கவில்லை
மரணத்தின் ஓலங்கள் ஓயவில்லை
இயற்கையின் சீற்றம் அடங்கவில்லை
பூமியின் கொந்தளிப்புக்கள் மாறவில்லை
பாலியல் வல்லுறவுகள் வித்திட
பாரிய நோய்கள் விருட்சமாக
குடும்ப உறவுகள் உதிரந்துவிட
நாகரீக கொலைகள் தாண்டவமாட
விண்மீன்கள் ஒளி வீச வேண்டும்
நாதம் ்காற்றில் இசை பாட வேண்டும்
இறைத்திட்டம் இங்கே நிறைவேற வேண்டும்
சந்தோசம் எங்கும் பிறக்க வேண்டும்
பூலோகம் ஒளி மயமாக வேண்டும்
பூலோகம் ஒளி மயமாக வேண்டும்
விண்ணகத் தேவன் மண்ணில் வர
காத்திருக்கும் நாங்கள் அன்போடு